தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் இருந்து வயலூர் முருகன் கோவில் வரை பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரைக்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருச்சி கோட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் காவிரி தீர்த்தம், பால்குடம், பன்னீர் இளநீர் புஷ்பம் பஞ்சாமிர்தம் விபூதி குங்குமம் திருமஞ்சனம் மேலும் பல பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு காவடியுடன் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கால்நடையாக வயலூர் நோக்கி வந்தனர். இந்த பாதயாத்திரை மாநில பசுப் பாதுகாப்பு பொறுப்பாளர் சசிகுமார் தொடங்கி வைத்தார்.
பாதயாத்திரையில் விசுவ இந்து பரிசத் அமைப்பில் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருச்சி மாவட்ட இணை செயலாளர்கள் கோபாலன், ஆழகு யுவராஜ், மாவட்ட பொறுப்பாளர்கள் தர்மராஜ், கார்த்திகேயன் ,ரவிச்சந்திரன், அனந்த பத்மநாபன் ரெங்கராஜ் மற்றும் பிரகண்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்த கோடிகள் கலந்து கொண்டனர் யாத்திரைக்கான ஏற்பாடுகளை சப்தரிஷி, மாரிமுத்து, குமார், ஸ்ரீ பாலாஜி ஆகியோர் செய்து இருந்தனர்