குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ரயில் திருச்சி ரயில் நிலைய நடைமேடை 1 ல் வந்து நின்ற சமயம் அந்த வண்டியை சோதனை செய்தபோது முன்பக்க பொதுப்பெட்டி கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆறரை கிலோ புகையிலை பொருட்களை சிறப்பு உதவியாளர் சுப்பிரமணி, அபிராமி மற்றும் காவலர்கள் கைப்பற்றி திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.