சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக CITU திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் கலந்து கொண்டார். இப்போராட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், மொத்த சரக்கு பரிவர்த்தனையில் இரண்டு சதவீதத்தை சுமைப்பணி தொழிலாளர் நல வாரியத்திற்கு ஒதுக்கிட வேண்டும் ,
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் , உலக தொழிலாளர் அமைப்பு உத்தரவு படி சுமை பணியாளர்கள் 100 கிலோ மூட்டை சுமப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், ஒன்றிய மாநில அரசு குடோன்களில் பணிபுரியும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ, பி எஃப், போனஸ் அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர் மேலும் இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏப்ரல் மாதத்தில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெரும் என தெரிவித்தனர்