தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைந்து “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று தொடங்கியது. இந்த விழிப்புணர்வு மாரத்தானை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு மாறத்தானில் பங்கேற்ற மாணவிகள் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தொடங்கி ரேஸ்கோர்ஸ் சாலை எஸ் ஆர் எம் ஹோட்டல் வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கை சென்று அடைந்தது இந்த விழிப்புணர்வு மாரத்தான் இல் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் வழங்கப்பட்டது இந்த விழிப்புணர்வு மாரத்தான்னில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.