திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஸ்ரீ வேலு தேவர் ஐயா அறக்கட்டளை இணைந்து திருச்சி மாவட்ட குழந்தைகள் மற்றும் இளையோருக்கான சுழற் கோப்பை தடகள போட்டி இன்று அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது இதனை திருச்சி மாவட்ட தடகள சங்கத் தலைவர் மயில்வாகனம் ஐபிஎஸ் மற்றும் வேலு தேவர் ஐயா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளியிலிருந்தும் ஏழு வயது முதல் 11 வயது மாணவர்களுக்கான 60 மீட்டர் தடகள போட்டி நடைபெற்றது இதே போல ஏழு வயது முதல் 50 மீட்டர் மேலும் 12 வயது முதல் 15 வயது வரை பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100 மீட்டர் தடகள போட்டி நடைபெற்றது மேலும் இதில் ஈட்டி எறிதல் குண்டு எறிதல் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு மேலும் மாநில அளவிலான போட்டிகளில் மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது