திருச்சி காவேரி மருத்துவமனையில் துண்டான கையை பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் இணைத்து சாதனை மேற்கொண்டது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு மருத்துவமனையின் இனண நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் செங்குட்டுவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இது குறித்து அவர் கூறுகையில்திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள கொத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேசுராஜேந்திரன் இவர் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு பணி தொடர்பாக சைக்கிளில் பாலத்தின் மீது சென்று போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கையில் மணிக்கட்டின் கீழ் துண்டானது. இதில் மயங்கி விழுந்த அவரை சுமார் 5மணி நேரம் கழித்து உறவினர்கள் கண்டு திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உடனடியாக மருத்துவ குழுவினர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.தற்பொழுது அவரது கை சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.பேட்டியின்போது மருத்துவர்கள் ராஜேஷ், ஸ்கந்தா, செந்தில்குமார், முரளிதாசன், ஆதில்அலி ஆகியோர் உடன் இருந்தனர்.