ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு என புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் அன்று மிகவும் எழுச்சியாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், உட்பட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட காளைகளும், காளையர்களும் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து சூரியூர் கிராமத்தில் புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் ஒன்று அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.. இந்த கோரிக்கையை அடுத்து புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ரூபாய்.3 கோடி நிதி ஒதுக்கி அதற்கான அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்து சூரியூர் கிராமத்தில் ரூபாய்.3 கோடியில் புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட் டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலைமச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு புதிய ஜல்லிகாகட்டு மைதானதற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..