திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நறுங்குழல் நாயகி நகர், வடக்கு இந்திரா நகர் என மொத்தம் 17 வீட்டு மனைகள் உள்ளன அதில் வீட்டு மனை எண் 7, 8, அருகில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது . அந்த இடத்தில் முஸ்லீம் மதத்தினர் பள்ளிவாசல் கட்டி உள்ளனர் பூங்காவுக்கென ஒதுக்கபட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்டியது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் முறையிட்டோம் உடனே அவர் அரியமங்கலம் கோட்ட துணை ஆணையர் அவர்களையும் திருவெறும்பூர் தாசில்தார் அவர்களையும் அந்த வரைபடத்தை சர்வே பண்ண சொல்லி உத்திரவிட்டார்.
சர்வேயும் 03.07.24 அன்று முழு வரைபடத்தையும் சர்வே செய்தார்கள் சர்வேயில் அந்த இடம் பூங்காவுக்கென ஒதுக்கபட்ட இடம் என்று உறுதி செய்தனர் பின்பு வருவாய் துறை அதிகாரிகள் புகார் மனுதாரர் இந்து அமைப்பினருக்க கடிதம் தருகிறோம் என்று கூறினார்கள் ஆனால் சர்வே பண்ணி 7 மாதங்கள் ஆகிறது இன்று வரை எங்களுக்கு கடிதம் தரவில்லை மற்றும் சர்ச்சைக்குரிய பூங்கா இடத்தில் அரசு பலகை அதாவது இது அரசுக்கு சொந்தமான இடம் என்றும் இல்லை எனவே இது பூங்கா இடம் என்றும் பெயர் பலகை வைக்குமாறு திருச்சி மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சார்பாக
இன்று திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அவர்களை திருச்சி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சீனிவாசன் திருச்சி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் இணை செயலாளர் அழகு யுவராஜ் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில் மனு அளித்தனர் இந்த நிகழ்வுக்கு திருவெறும்பூர் ஒன்றிய விசுவ ஹிந்து பரிஷத் பிரகண்ட தலைவர் விஜயராமன் திருவெறும்பூர் விசுவ ஹிந்து பரிஷத் பிரகண்ட செயலாளர் பிரபாகரன் திருவெறும்பூர் விசுவ ஹந்து பரிஷத் பிரகண்ட செயலாளர் பிரபாகரன் பாஜக மாவட்ட உள்ளாட்சி பிரிவு செயலாளர் வேங்கூர் கார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.