ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26 வது பட்டமளிப்பு விழா கல்லூரி ஸ்ரீபாதுகா அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை ஆர்.கே.ஸ்வாமி லிமிடெட் நிர்வாகக்குழுத் தலைவர் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 2 தங்கப்பதக்கங்கள் 24 பல்கலைக்கழகத் தரவரிசை பெற்றவர்கள் உள்ளிட்ட 1009 மாணவர்களுக்குப் பட்டச்சான்றிதழ்களையும் ரொக்கப்பரிசினையும் வழங்கினார்.
முன்னதாக சிறப்பு விருந்தினர் அவர்களின் பட்டமளிப்பு விழா சிறப்புரையில், ஆண்டவன் அருளாசியினால் நம் கல்லூரி இந்நாள் வரை பல்வேறு சாதனைகளைப் பெற்றுவருகிறது என்பதை எடுத்துக்காட்டியதோடு,
மாணவர்களாகிய நீங்கள் குறிக்கோளை நிர்ணயித்துக்கொண்டு அதற்கேற்ப உங்களின் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் அப்போதுதான் இலக்கை அடையமுடியும் என்று கூறி இளம்பட்டதாரிகளை வாழ்த்தினார்.
நிகழ்வின் முன்னதாகக் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் எம்.பிச்சைமணி பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். மூத்த துணைமுதல்வர் முனைவர் ஜோதி, மற்றும் துணைமுதல்வர்கள் முனைவர் கிருஷ்ணன், முனைவர் உபேந்திரன், புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர்.