தமிழ்நாடு கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதி பங்கீடு ஆன 2152 கோடியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசனை கண்டித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது இதில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 2152 கோடி நிதியை வழங்காத காரணத்தால் அரசு பள்ளி மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் மேலும் 42 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது எனவே நிதியை உடனே வழங்க வேண்டும்
மேலும் இந்திய அளவில் கல்வியின் அனைத்து படிநிலைகளிலும் முன்னிலை வகிக்கும் தமிழகத்தை மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நடவடிக்கை குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 200 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்