தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் , முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். இந்நிகழ்வில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் முத்துகுமார்,மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெய ஸ்ரீ, மற்றும் அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.