அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ,
திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் சசிகுமார், இணைச் செயலாளர் வழக்கறிஞர் முல்லை சுரேஷ், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான், மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி மற்றும் அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் கட்சியினர் உடன் இருந்தனர்.