திருச்சி மாநகரின் மேற்கு எல்லையில் ஆறு கன் மதகு பகுதியில் கிராம காவல் தெய்வமான குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனுக்கு புத்தூர் மந்தை திடலில் பதிவு கோவில் உள்ளது புத்தூர் பகுதி மக்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குழுமாயி அம்மனுக்கு ஐந்து நாள் விழா எடுத்துக் கொண்டாடி வருகின்றனர் இந்த கோவிலின் குட்டி குடித்தல் திருவிழா விமர்சையானது இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது முதல் நிகழ்ச்சியாக புத்தூர் பகுதியில் மேலதாளத்துடன் யானை மீது மலர் மாலை எடுத்துக் கொண்டு குழுமாயி கோயிலுக்கு சென்று நள்ளிரவு அம்மனை வணங்கி புத்தூர் மந்தை திடல் அழைத்து வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான குட்டி கொடுத்தல் இன்று காலை புத்தூர் மந்தை திடலில் தொடங்கியது அறநிலை துறை சார்பில் முதல் ஆடு பலியிடப்பட்டு தொடர்ந்து மக்கள் தங்கள் வேண்டுதல்களுக்காக கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு ஆடுகளின் ரத்தத்தை அருளாலே குடித்தார். அதனைத் தொடர்ந்து அம்மன் தேரில் அமர்ந்து வீதி உலா கண்டருளினார்.
இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றாலும் புத்தூர் நால்ரோடு அருகே இளைய அன்பிலாரின் அன்புத் தம்பிகள் குழு சார்பில் 14ம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை புத்தூர் மீன் மார்க்கெட் சங்கத் தலைவர் சரவணன் தொடங்கி வைத்தார்.விழா கமிட்டி உறுப்பினர்கள் புத்தூர் கே.கணேஷ். எம்.பி.ஏ, மீன் மார்க்கெட் கே. ரமேஷ்.உள்ளிட்ட பலர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர் . அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாப்பிட்ட பின் அன்னதான ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி சென்றனர்.