பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது… வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை முதன்முறையாக அரசு துறை அலுவலகத்தில் நடந்துள்ளது, இதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமலாக்கத்துறை அதன் முதல் கட்ட அறிக்கையை கொடுத்துள்ளதில் மூன்று வகையான முறையில் ஊழல், முறைக் கேடு நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் குவாட்டருக்கு பத்து ரூபாய் வீதம் வசூலிக்கப் பட்டுள்ளது, டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது, நூறுகோடி ரூபாய் ஆண்டுதோறும் டாஸ்மாக் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. டாஸ்மாக பணியாளர்கள் நியமனம், இடமாற்றத்தில் முறைகேடு, ஊழல் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறினாலும், 2 லட்சம் கோடி ரூபாய்வரை ஊழல் நடந்ததற்கு வாய்ப்பு உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் சாராய ஊழல் நடைபெற்றது. இதேபோன்று ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னைக்கு வந்துள்ளது. பல மடங்கு டாஸ்மாக் ஊழல் நடைபெற்று உள்ளது டெல்லி முதல்வருக்கு அங்கு நடந்த சாராத ஊழலில் தொடர்பிருப்பது போன்று, இங்கு நடந்த டாஸ்மாக் ஊழலில் முதல்வருக்கு தொடர்ப்பு இருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆதாரம் இருப்பதால் தான் அமலாகத்துறை சோதனை நடத்தி உள்ளது. இந்த டாஸ்மாக் ஊழலை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் வகையில் நாளை மறுதினம் 17 ஆம் தேதி சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது.
திமுகவில் உள்ள உச்சபட்ச தலைமை இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளது. திமுக தலைமைக்கு இந்த அமலாக்கத்துறை சோதனை மூலம் பைத்தியம் பிடித்துள்ளது. இதிலிருந்து திமுக அரசின் ஊழல் கோரமுகம் வெளிய வந்துள்ளது. வேதனை, ஊழல் நிறைந்த ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. அதற்கு சிகரம் உள்ளது போன்று டாஸ்மாக் ஊழல் அமைந்துள்ளது. திருச்சி உக்கிரகாளியம்மன் கோவில் இடத்தில் கோவில் திருவிழாவிற்காக பேனர் வைத்ததற்காக பாஜக மாநகர பொதுச்செயலாளர் உள்பட ஆறு பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர் இது காவல்துறையின் அராஜகத்தை காட்டுகிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். திமுக தலைமைக்கு தெரியாமல் இந்த ஊழல் நடைபெற்றுஇருக்க வாய்ப்பு இல்லை. உரிய ஆதாரம் இல்லாமல் அமலாகத்துறை சோதனை செய்யாது. சேலத்தில் ஆசிரியர் ஒருவர் மும்மொழி கொள்கைக்காக ஆதரவாக இருந்தவர் மீது நடவடிக்கை எடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கல்வியை கற்று கொள்வதற்கும், அறிவு திறனை வளர்த்து கொள்வதற்கும், அது குறித்து கேள்வி கேட்க பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிமை உள்ளது. தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையாகவே உள்ளது. இந்த முறையும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் வருமானம் 52 ஆயிரம் கோடி இருக்கும் பொழுது இதுபோல் பற்றாக்குறை பட்ஜெட் ஆக உள்ளது ஆனால் குஜராத்தில் டாஸ்மாக் வருமானம் இல்லாமலே சிறப்பான முறையில் வர்ஜல் தாக்கல் செய்யப்படுகிறது தமிழக நிதி அமைச்சர் குஜராத் நிதியமைச்சரை சந்தித்து எப்படி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள் என்பதை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பட்ஜெட் தமிழகத்தின் மோசமான நிதி நிலைமையை எடுத்துக்காட்டி உள்ளது என தெரிவித்தார்