தமிழக அரசு 2021 சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டு காலமாக சம்பளம் இல்லாமல் கூப்பிட்டவுடன் உயிரை கொடுத்து பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். பிரிவு அலுவலகங்களில் – உபமின் நிலையங்களில் ஒப்பந்ததாரர் மூலமாக தினக்கூலி வழங்கி ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதை கைவிட்டு நேரடியாக வாரியமே – மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை காலிப்பணியிடங்களில் அமர்த்தி தினக்கூலி வழங்க வேண்டும். நுகர்வோருக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் அன்றாட பணிகள் செய்யும் கீழ்மட்ட பணியிடங்களை பூர்த்தி செய்யாயததால் வேலை பளுவை சுமப்பதால் தினம், தினம் விபத்து, உயிர்பலி வாங்குவதை தடுத்திட ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். மின்வாரிய நிர்வாகமே ஒப்பந்த ஊழியர் இல்லை என்று பொய்யான அறிக்கை கொடுப்பதை கைவிட வேண்டும்

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சி மண்டல அளவிலான தர்ணா போராட்டம் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.போராட்டத்தை விளக்கி வட்ட செயலாளர்கள் பழனியாண்டி, நடராஜன், திருமலைசாமி, ஆகியோர் பேசினர். திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் நிறைவுரையாற்றினார். முடிவில் வட்டத்தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *