அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் எடுத்துக் கூறும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்டம் கிழக்கு தொகுதி காந்தி மார்க்கெட் பகுதி கமான் வளைவு அருகில் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்ட பேரவை செயலாளர், கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் பொதுமக்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் பத்மநாதன், வனிதா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் அய்யப்பன் ஜாக்குலின், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் அம்பிகாபதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, பேரவை நிர்வாகிகள் எனர்ஜி அப்துல் ரகுமான், பொன்னர், பகுதி கழகச் செயலாளர்கள் கலீல் ரகுமான், ஏர்போர்ட் விஜி வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், மற்றும் பேராசிரியர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.