திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23,000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் இனம் கண்டு 5000 தெருநாய்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணிகளை இன்று திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் பணியின் அவசர அவசியம் கருதி இம்மாநகராட்சியில் நான்கு ABC/ARV மையங்களில் ABC/ARV பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரத்தை பொருத்தவரை கோணக்கரை நாய்கள் கருத்தடை மையம் , அம்பேத்கார் நகர் நாய்கள் கருத்தடை மையம், அரியமங்கலம் நாய்கள் கருத்தடை மையம், பொன்மலைப்பட்டி நாய்கள் கருத்தடை மையம் உள்ளது. இம்மாநகராட்சியில் கடந்த நிதி ஆண்டில் (23-24) 11,929 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்ட்டது.

நடப்பு நிதி ஆண்டில் (24-25) 9,841 தெருநாய்களுக்கும் ஆகமொத்தம் 21,770 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் M/s. ANIMAL HELPING HANDS. திருச்சி நிறுவனித்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்சியில் ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா , நகர் நல அலுவலர் விஜய் சந்திரன்,மண்டலத் தலைவர் துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *