திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக திருச்சி மாநகர், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கலந்து கொண்டு அதிமுக கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் பரத் குமார், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனா பேகம் மீரான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.