தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை 2025 2026 சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளின் கீழ் ரூபாய் 16.50 இலட்சங்கள் மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் புத்தூர் கிராமம் குடமுருட்டி வடிகால் நெடுகை முதல் 500 மீட்டர் வரை தூர் வாரும் பணியினை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அவரைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் கொண்டு உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர்வாரம் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், கவுன்சிலர்கள் முத்து செல்வம், காஜாமலைவிஜி ஆற்று பாதுகாப்பு உட்கோட்டம் பொறியாளர் தினேஷ் கண்ணன் ஆற்று பாதுகாப்பு கோட்டம் செயற்பொறியாளர் நித்தியானந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்