திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28-வது ஆண்டுவிழா, கலைவிழா மற்றும் விளையாட்டுவிழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி ஸ்ரீபாதுகா அரங்கில் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார்.மேலும் கல்வி, கலை, விளையாட்டு ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கிய 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் ரொக்கப் பரிசுகளையும், கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்களின் விழாப் பேருரையில் மாணவர்கள் கல்வி மற்றும் பல்துறைகள் சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொண்டால் தான் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வெற்றிபெறமுடியும் என்பதைக் கூறி மாணவர்களை வாழ்த்தினார். நிகழ்வின் முன்னதாகக் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி ஆண்டறிக்கை வாசித்தார்.
தொடர்ந்து மாணவப் பேரவைத் தலைவர் அரவிந்தன் உரை நிகழ்த்தினார் . விழா நிறைவில் மூத்த துணைமுதல்வர் முனைவர் ஜோதி நன்றியுரை ஆற்றினார். துணைமுதல்வர்கள் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.