தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் விசுவாவசு வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ விக்ஞானநிதி சபா மந்திர் ஸ்ரீ ஸ்ரீ பாதராஜமடத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டு பஞ்சாங்கத்தை வெளியிட்டார்.
முதல் பிரதியை ஸ்ரீ குட்டி சாஸ்திரி, ஸ்ரீ ஆதித்ய ராமசாமி, ஸ்ரீ சீனிவாசன், ஸ்ரீதரன், ஸ்ரீ பிச்சுமணி ஆண்டவன் கல்லூரி, ஸ்ரீ மாருதி ராமசாமி, ஸ்ரீ தாத்தம் முகுந்தன், ஸ்ரீமதி விஜயா, ஸ்ரீ சுப்பு, ஸ்ரீ விஜயராகவன் கிருஷ்ணன், ஸ்ரீ சௌரிராஜன் மற்றும் மாநில மாவட்ட தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.