திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கத்திற்கு முன் 60 ஆட்டோக்கள் விமான நிலைய பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். விமான நிலையம் விரிவாக்கத்திற்கு பின்பு ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட பின்பு 60 ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிட்டது. நீண்ட நாட்களாக விமான நிலைய நிர்வாகிகளுடன் கடினமாக போராட்டத்தில் இருந்தனர். பலதரப்பட்ட போராட்டங்களில் தோல்வியடைந்த நிலையிலும் போராட்டத்தை கைவிடாமலும் தொடர்ச்சியாக ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினரின் போராட்ட அறிவுரைகளின் படி விமான நிலைய ஆட்டோ டிரைவர்களுக்கு உறுதுணையாக ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினுடைய நிர்வாகிகள் அனைவரும் அவர்களுக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் உறுதுணையாக நின்று போராட்டங்களை, உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் ஊட்டி போராட்டத்தை நடத்தி சென்றனர்.
திருச்சியில் உள்ள மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் அழைத்து விமான நிலையத்தின் வாசல் முன்பு மிகப் பிரம்மாண்ட முறையில் விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர்களின் காதுகளுக்கு விழுவதைப் போல விமான நிலைய ஆட்டோ ஓட்டுநர்களின் நிலைமைகளை பற்றி கண்டனத்தையும் முழக்கங்களையும் ஒலிபெருக்கியின் மூலம் அனைத்து சங்கங்களின் சார்பாகவும் அனைத்து கட்சியின் இயக்கங்கள் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் விமான நிலைய அதிகாரிகளுக்கு கோரிக்கைகளாக எடுத்துரைத்தோம். மீண்டும் காத்திருப்பு போராட்டம் | விமான நிலைய வாயில் முன்பு முழக்கம் இடுப்பு போராட்டம், காவல் நிலையத்தில் மீண்டும் மீண்டும் மனு கொடுக்கும் போராட்டம் என்று தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் தினந்தோறும் விடாமுயற்சியாக செய்து வந்தோம். அதன் அடிப்படையில் விமான நிலையத்தின் காவல் ஆய்வாளர் உதவியோடு வட்டாட்சியர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்து சமரச தீர்வு ஏற்படுத்தி கொடுத்தார். சமரச தீர்வு பேச்சு வார்த்தையில் சமூக நீதி பேரவையின் நிறுவனர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் நிறுவனர் சம்சுதீன் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுகத்தீர்வு காணப்பட்டது. அந்த தீர்வில் பயணிகளை ஏற்றுவதற்கும், இறங்குவதற்கும் மற்றும் ட்ராலி அருகாமையில் இருப்பதற்கும் வழிவகை செய்து தருவதாக விமான நிலைய நிர்வாக உயர் அதிகாரிகளிடம் கலந்தாய்வு பண்ணி நாங்கள் இதை விரைவில் செய்து தருகிறோம் என்று ஒப்புதல் அளித்தனர்.
07.04.25 அன்று விமான நிலைய அதிகாரி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை வாருங்கள் உங்களுக்கு ஆட்டோக்கள் நுழைவதற்கான தடைகளை அகற்றி பயணிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் அனுமதி அளிக்கிறேன் என்று கூறியதன் விளைவு 8-ம் தேதி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் ஜீவா ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணலிதாஸ், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் லதா மற்றும் விமான நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வரும் நிர்வாகிகள் அவர்கள் முன்னிலையில் பயணிகளை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் இடங்களை தேர்வு செய்து உத்தரவு அளித்து அங்கு நான்கு ஆட்டோக்களை மட்டும் அமர்த்துவதற்கு அனுமதி அளித்து இனி ஆட்டோ ஓட்டுனர் ஆகிய உங்களிடம் பொறுப்பை கொடுத்துள்ளோம். தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் உங்களை ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவருக்கு எங்களின் 60 ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காத்து தந்த விமான நிலைய அதிகாரிக்கு எங்களின் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மனம் திறந்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.