சத்துணவு மைய கட்டுமான பணிகளில் பணி முன்னேற்றம் இல்லாததாக கூறி உதவி செயற்பொறியாளர் மகாதேவன், சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரேவதி என்பவரை பணி ஒப்படைப்பு செய்தும் வட்டார வளர்ச்சி அதிகாரி லதா மற்றும் துணை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி ஆகியோரை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியும் உத்தரவிட்டதை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைப்பு சிவ சகாயராஜ் தலைமை தாங்கினார்.
பொறியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் ஈஷா, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் பழனிச்சாமி, மற்றும் உதவி செய்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கணணி இயக்குபவர்கள், ஒன்றிய முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து நிலை ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் திரளான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இந்தப் போராட்டம் குறித்து கலெக்டர் இன்றுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்போம் என்று போராட்டக்காரர்கள் கூறினார்கள்.