சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் பா.ஜ.க. ஒன்றிய அரசை கண்டித்தும். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சிவா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர். இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிமை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.