திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பிஷப்.கிறிஸ்துமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். எங்களது இந்திய கிறிஸ்துவ ஜனநாயக கட்சி துவங்கிய 27ஆண்டு முடிவடைகிறது. இதனை முன்னிட்டு வரும் 20ம் தேதி ஈஸ்டர் தினமான அன்று 27ஆம் ஆண்டு விழாவையொட்டி ஏழை எளியோருக்கான நலத்திட்ட உதவி வழங்குவதற்காகவும், முப்பெரும் விழாவாக கொண்டாடுவதற்காகவும் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் எங்களது கூட்டம் நடத்துவதற்காக கடந்த 3ம் தேதி உறையூர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம். அப்போது எந்த தடையும் கூறாமல் அனுமதி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு கூட்டம் நடத்துவதற்கான கைப்பிரதிகளை அடித்து விநியோகித்துள்ளோம். இந்நிலையில் திடீரென உறையூர் காவல்துறை ஆய்வாளர் எங்களை அழைத்து தங்கள் கூட்டத்திற்கு அனுமதி ரத்து செய்து விட்டதாகவும் அனுமதி தர முடியாது என்று கூறிவிட்டார்.
அதற்கான எந்த காரணமும் எங்களிடம் தெரிவிக்கவில்லை அனுமதி இல்லை என்று மட்டுமே கூறி வருகிறார். இது அரசியல் சூழ்ச்சியின் காரணமாக இந்த தடை கொடுக்கப்பட்டிருக்கிறது காரணம் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏவான இனிகோ இருதயராஜ் சென்னையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு எதிராக நாங்கள் தடை உத்தரவை வாங்கியதை தொடர்ந்து அவரின் தூண்டுதல் காரணமாக எங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு குரல் கொடுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எங்களது கட்சியின் சார்பில் சுமார் 25 இடங்களில் தனித்து போட்டியிட உள்ளதாகவும், மேலும், கூட்டம் நடத்துவதற்கு தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.