நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின் போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோவில் அருகே அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்விற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் எம்பி ரத்தினவேல், முன்னாள் அரசு கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி, பூனாட்சி, முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், இணை செயலாளர் ஜாக்லின், தலைமை கழக செயற்குழு உறுப்பினரும், திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளருமான நஷீமா ஃபாரிக், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ மற்றும்
மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள், மாணவரணியினர் மற்றும் மகளிரணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.