டெல்டா கென்னல் கிளப் இந்தியாவில் நாய் கண்காட்சிகளுக்கான மதிப்புமிக்க ஆளும் குழுவான கென்னல் கிளப் ஆஃப் இந்தியா மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இனத்தின் தரநிலைகள், பொறுப்பான செல்ல பிராணிகள் உரிமை மற்றும் உலகத் தரம் வாய்ந்த நாய் கண்காட்சிகளை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. வரும் 27ம் தேதி காஜாமீயான் பள்ளி மைதானம், மாநில அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள நாய் பிரியர்கள் பங்கேற்கின்றனர். இந்த காண்காட்சியில் 50மேற்பட்ட சர்வதேச நாய் இனங்கள், 50க்கும் மேற்பட்ட தூய்மையான மற்றும் சர்வதேச நாய் இனங்களின் பங்கேற்க உள்ளது.
இக்கண்காட்சியின் மூலம் நாய் பிரியர்களிடையே சமூக உறவுகளை வலுப்படுத்துவதையும், நெறிமுறை மற்றும் பொறுப்பான இனப்பெருக்க நடைமுறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி மாவட்ட தலைவர் மருத்துவர் ராஜவேல் டெல்டா கேனல் கிளப் திருச்சியில் அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் நெறிமுறை நாய் வளர்ப்பு கொண்டுவர வேண்டும். அதன் காரணமாக இங்கு மருத்துவர், கால்நடை மருத்துவர்கள் நாய் வளர்ப்பவர்கள் ஆகியோரைக் கொண்டு நாய் கண்காட்சி தொடர்பான விவரத்தை உங்களிடம் கொண்டு வருகிறோம். இந்த கண்காட்சியில் நெறிமுறையில் நாய் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு இங்கு கொடுக்கப்பட உள்ளது. இன் கண்காட்சியில் மாநகராட்சியின் வெறி நாய் இல்லாத திருச்சி என்பதையும் இக்கண்காட்சி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சியாக எடுத்துச் செல்ல உள்ளோம்.
திருச்சி மாநகராட்சி தமிழக அரசு மூலமாக வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு சிப் பொருத்தப்பட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சிப் பொருத்துவதன் மூலம் நாய் வளர்ப்பவர் விபரம், நாய் உடைய தன்மை, ஆகியவை அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே கென்னல் கிளப் ஆப் இந்தியா அனைத்து விதமான நாய்களையும் பிரித்தெடுத்து அதற்கு சிப் பொருத்தி அதற்கான சான்றிதழும் அளித்துள்ளனர். அப்படி சான்றிதழ் பெற்ற நாய்கள் மட்டுமே கென்னல் கிளப் ஆப் இந்தியாவில் கண்காட்சியில் இடம்பெற முடியும். கலப்பு நாய்களின் ஏற்படும் பாதிப்பு உள்ளது இதனை தடுப்பதற்காக முனைப்பு தான் பொருத்துவது என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது இணைச் செயலாளர் அருள்ராஜ் மற்றும் பல உடன் இருந்தனர்.