திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த வசந்தா உள்ளிட்ட பொதுமக்கள் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- நாங்கள் மேற்கண்ட முகவரியில் 13 ஆண்டு காலமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் எங்களுக்கென்று சொந்தமாக வீட்டுமனை கிடையாது. நீண்ட காலமாக இலவச வீட்டுமனை வழங்குவதாக கூறியும் இதுவரை கிடைக்கவில்லை ஆகவே தாங்கள் (கலெக்டர்) அதிகாரிகளிடம் எங்களுடைய நிலைமையை ஆய்வு செய்து எங்களுக்கு நிரந்தரமாக வசிக்க இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
மேலும் திருவரம்பூர் பர்மா காலனி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் தலைமையிலான பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து இன்னொரு மனு அளித்துள்ளனர் அதில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் கூத்தைபார் பேரூராட்சியில் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அந்தத் திட்டத்தை மட்டும் அல்லாமல் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் இந்த பேரூராட்சியில் செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் மனு அளித்த போது, பாஜக மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவர் வேங்கூர் கார்த்தி, திருவெறும்பூர் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் உள்ளனர்.