திருச்சி பிராட்டியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் விஜய் லட்சுமி என்பவர் இன்று காலை திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி பிராட்டியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் இவர் ரயில்வேயில் கீ மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பள்ளி தேர்வு முடிந்து கோடைவிடுமுறை என்பதால் நேற்று மணப்பாறையில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று உள்ளார் .
இந்நிலையில் இவரது வீட்டிற்கு விடியற்காலையில் மர்ம நபர்கள் தீவைத்து எரித்ததாக தகவல் அளித்தனர் உடனடியாக வீட்டிற்கு வந்து நேரில் பார்த்தபோது இவரது வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலாய் இருந்தது மேலும் இவர் வீட்டில் இருந்த மின்விசிறி டிவி கட்டில் மெத்தை துணி ஆகிய அனைத்து பொருட்களும் சாம்பலானது இது குறித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கடந்த சில மாதங்களாக இவர்களுக்கும் இதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் சண்டை இருந்து வந்ததாகவும் , அதனால் தன்னையும் தனது பிள்ளைகளையும் கொலை செய்யும் நோக்கில் தனது வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என கூறி புகார் மனு அளித்தார் அந்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.