அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் வழக்கறிஞர் புவனேஸ்வரி, வழக்கறிஞர் இணை செயலாளர்கள் முல்லை சுரேஷ், டி.ஆர்.மணிவண்ணன்,
முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, மீனவரணி ஆதவன், செல்லப்பா, குமார், ரெயின்போ சேகர், புத்தூர் ரமேஷ், வழக்கறிஞர்கள் எபினேசர் ஜெயசீலன், தலைட்சுமி, பாபு, உறையூர் சந்திர மோகன், இப்ராகிம், மற்றும் பலர் உள்ளனர்.