திருச்சி கீழ ஆண்டாள் வீதி பகுதியில் உள்ள ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் ஆலயத்தின் 60வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி கணபதி ஹோமம் உடன் தொடங்கி, 14 14ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி இருபதாம் தேதி வளையல் அலங்காரம் 22 ஆம் தேதி கரக உற்சவம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 23ஆம் தேதி புதன்கிழமை மூலஸ்தான சந்தன காப்பு அலங்காரம் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று மதியம் மதுரை வீரன் கருப்பண்ண சாமிக்கு சிறப்பு பூஜை செய்து குட்டி குடித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களுக்காக ஆடுகளை பலியிட்டு தங்களின் நோ்த்திக்கடனை செலுத்தினா். மேலும் கிடா ரத்தத்தை கோயில் மருளாளி குடித்து பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினாா். இந்த நிகழ்வில் பக்த கோடிகள் தெருவாசிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சி காண ஏற்பாடுகளை ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகிகள் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.