திருச்சி மாவட்டம் தெற்கு தாராநல்லூர் கிராமம் தோப்புத் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ எல்லை முத்துமாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ சந்தன கருப்பு, ஸ்ரீ ஒண்டி கருப்பு, ஸ்ரீ மதுரை வீரன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு சிறப்பு யாகங்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
இந்த அருள்மிகு ஸ்ரீ எல்லை முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் விழா கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் மகளிர் அணியினர் மற்றும் இளைஞர் அணி ஆகியோர் செய்திருந்தனர் மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.