திருச்சி மாவட்டம் ஆழ்வார் தோப்பு சமூக நல கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி ஆழ்வார்தோப்பு போலீஸ் பூத் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆழ்வார் தோப்பு சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகம்மது அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தமுமுக மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, தமுமுக மாநில தலைமை கழக பேச்சாளர் முகம்மது ரஃபிக், இலாஹி பள்ளிவாசல் இமாம் முகம்மது ஹாசிப், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அப்பாஸ் எஸ்டிபிஐ பகுதி செயலாளர் அப்துல் ரகுமான், ஆழ்வார் தோப்பு பகுதி திமுக கவுன்சிலர் கமால் முஸ்தபா, திருச்சி மத்திய மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மொய்தீன் மற்றும் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.