தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி ஆர் சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவர் பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து இயக்க செயல்பாடுகள் பற்றியும் மாநில பொருளாளர் இளங்கோ நிதியும் பொது நிகழ்வு பற்றி எடுத்துரைத்தார். தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:-

சரண் விடுப்பு ஊதியம் 01 10 2025 முதல் பெறுதல் உள்ளிட்ட 9 சலுகைகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியரிலிருந்து பணி மாறுதல் மூலம் பணிபுரிகிற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கடந்த 2016 க்கு பிறகு பணி புரிகிற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது என்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்வது எனவும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், கடந்த மூன்று ஊதிய குழுக்களில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால் ₹500 ₹850 மற்றும் ரூபாய் 2000 என தனி ஊதியமாக வழங்கப்பட்டது தற்போது வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் 2000 க்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் தனி ஊதியம் ரூபாய் 2000 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை பள்ளி பதவியிலும் தொடர்ந்து பெற அரசாணை 303 திருத்தம் செய்து ஆணை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் புரவலர்கள் அருள் சுந்தர்ராஜன் நடராஜன் பீட்டர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியாக மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன் நன்றி உரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்