தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி ராக்போர்ட் ஹோட்டலில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் இராசாமணி மற்றும் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் யுவராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சென்னை விழுப்புரம் சேலம் மதுரை ஈரோடு நாமக்கல் கரூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:- தமிழகத்தில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை இயக்கிடக்கோரியும் குறைந்த விலையில் தரமான எம்சாண்ட் பி சென்ட் ஜல்லி கிடைப்பதற்கு கல்குவாரி கிரஷர்களை அரசுடைமையாக்கி அரசே இணையதளம் மூலம் விற்பனை செய்யக்கோரியும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட அதிக பாரம் கொண்ட வாகனங்களை தடை செய்து அனுமதிக்கப்பட்ட பாரம் கொண்ட வாகனங்களை நடைமுறைப்படுத்த கோரி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் இராசாமணி மற்றும் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் யுவராஜ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த ஒன்றை ஆண்டுகளாக தமிழ்நாடு மணல் உரிமையாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கோரி சம்பந்தப்பட்ட துறையினுடைய அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களிடம், நீர்ப்பாசனம் கனிமவளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று மனு அளித்துள்ளோம். இப்போது வரை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி வருகிற மே 23ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.