திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று அவசரக் கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னில வகித்தார்.இதில் துணை ஆணையர் பாலு, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி ,விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா மற்றும் நகர் மன்ற அலுவலர் செயற் பொறியாளர்கள் மாநகராட்சி உதவி ஆணையர்கள் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில், புத்தூர் ஈ.வி.ஆர். சாலை பகுதியில் 64.58 சதுர அடி பரப்பளவில் அரசு வழிகாட்டுதல் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் திருவுருவச் சிலை நிறுவப்பட உள்ளது.

அந்த இடத்தை அதன் உரிமையாளர்கள் மரகதம் ,பூரணி ,தரணி ஆகியோர் தானமாக மாநகராட்சி மேயர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தரப்பட்டுள்ளது. சிலை அமைத்தல் பராமரித்தலுக்கான முழு செலவையும் சிலை அமைக்க கோரும் மேயர் அன்பழகனே ஏற்றுக்கொள்ள வேண்டும். வெண்கலத்திலான சிலையை மட்டுமே அமைக்க வேண்டும் அதன் பின்னர் கலெக்டர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறை அனுமதியுடன் சிலை அமைப்பதற்கு அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். என தீர்மானம் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது பின்னர் இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர் கோவிந்தராஜ் பேசும்போது விரைவாக சிவாஜி சிலையை அமைத்து முதல்வர் வருகிற ஒன்பதாம் தேதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்