பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது பிறந்த விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு பாஜக சார்பில் மகாராஷ்டிரா கவர்னர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி எல். முருகன், பாஜக மாநில தலைவர் . நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் நிருபர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அனைத்து தலைவர்களையும் போற்றுகின்ற ஒரு கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. 75 வது சுதந்திர தினம் கொண்டாடும் போதே இந்தியா முழுவதும் மறைக்கப்பட்ட அனைத்து தலைவர்களின் வரலாறுகளையும் ஆவணப் படுத்துவது,

அனைத்து தலைவர்களின் புகழையும், நாட்டிற்கு ஆற்றிய சேவைகளையும் மக்களுக்கு எடுத்து செல்லும் பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார். விரைவில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்பொழுது எந்த இடத்தில் மணிமண்டபம் கட்டினால் முத்தரையருக்கு பெருமை சேர்க்குமோ அந்த இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். மேலும், அடுத்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையருக்கு மத்திய அரசின் சார்பில் இதே இடத்தில் தபால் தலை வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சிவசுப்பிரமணியன்,திருச்சி மாநகர் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து,முன்னாள் மாவட்ட தலைவர்கள் . ராஜசேகரன், ராஜேஷ் நிர்வாகிகள் காளீஸ்வரன்,நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர்களை தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கேகே செல்வகுமார் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *