KISNA வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது தென்னிந்தியாவில் இந்த பிராண்டின் தடத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஹரி கிருஷ்ணா குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.கன்ஷியாம் தோலாகியா இந்த பிரம்மாண்டமான திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். இந்த அறிமுக விழாவில் KISNAவின் குழந்தைகளுக்கான அழகான புதிய நகைத் தொகுப்பான ‘Tiny Tales’-ஐயும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரிசையில் இளம் குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுத் தனமான கூறுகள், தேவதைக் கதை மையக்கருத்துகளால் ஈர்க்கப்பட்ட தனித்துவ டிசைன்கள் உள்ளன. இந்த வைர நகைகளுக்கான தயாரிப்புக் கட்டணத்தில் 100% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பழைய தங்க நகை பரிமாற்ற திட்டத்தையும் KISNA வழங்குகிறது. இது நம்பிக்கையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் தங்கள் பழைய நகைகளை புதிய வடிவமைப்புகளுக்கு நுகர்வோர் மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. ஹரி கிருஷ்ணா குழுமத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குநர் திரு. கன்ஷியாம் தோலாகியா கூறியதாவது: “பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனை மதிக்கும் தமிழ்நாட்டை, KISNAவின் மதிப்பீடுகள் பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டில் எங்கள் விரிவாக்கம் ‘ஹர் கர் KISNA’ என்கிற எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது -வைர நகைகளை வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு பெண்ணின் கனவையும் இது நனவாக்குகிறது” என்றார்.

KISNAவின் இயக்குநர் திரு. பரக் ஷா மேலும் கூறுகையில் : திருச்சியில் புதிய கடை திறக்கப்பட்டதன் மூலம், அணுகக்கூடிய விலையில் ஆடம்பர நகைகளுக்கான KISNAவின் உறுதிப்பாட்டை தமிழ்நாட்டின் நகை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தடையற்ற, நவீன ஷாப்பிங் அனுபவத்தை உறுதிசெய்யும் அதே வேளையில் எங்கள் டிசைன்கள் பிராந்திய கலாச்சாரத்தைக் கொண்டாடுகின்றன” என்றார். சமூகத்திற்குத் திருப்பித் தருவது என்கிற KISNA நிறுவனத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த பிராண்ட் உணவு விநியோகம் செய்தது. உண்மையான கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதிலும் தேவைப்படுபவர்களை ஆதரிப்பதிலும் உள்ளது என்கிற KISNAவின் நம்பிக்கையை இந்த முயற்சி பிரதிபலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்