சாமானிய மக்கள் நலக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டல் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சாமானிய மக்கள் நலக் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஷைனி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் மற்றும் பொருளாளர் இராஜ குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சாமானிய மக்கள் நலக் கட்சியின் பொதுச் செயலாளர் குணசேகரன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவத்தை வழங்கினார்.
இந்த புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாமில் திமுக மாநகர துணை அமைப்பாளராக இருந்த ரசூல் என்பவர் அவருடைய ஆதரவாளர்களுடன் அக்கட்சியிலிருந்து விலகி சாமானிய மக்கள் நலக் கட்சியில் மேற்கு தொகுதி ஒன்றிய செயலாளராக இனைத்துக் கொண்டார். மேலும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சாமானிய மக்கள் நல கட்சியில் புதிய உறுப்பினர்களாக இன்று இணைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் குணசேகரன் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சாமானிய மக்கள் நல கட்சியை பலப்படுத்துவதற்காக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தற்போது எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது மேலும் திருச்சி காவிரி ஆற்றில் புதிதாக திறக்கப்பட உள்ள 13 மணல் குவாரிகளை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற ஜூன் 14ஆம் தேதி திருச்சி அண்ணா சிலை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சாமானிய மக்கள் நல கட்சி மூலம் மக்களை ஒன்று திரட்டி நடைபெறும் என தெரிவித்தார்.