தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து மீட்பு குழுவின் தலைவருமான கே.வி. தங்கபாலு அவர்கள் இரண்டாம் கட்ட ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேற்று அரியலூர் வந்தடைந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று அரியலூர் துறையூர் கொப்பம்பட்டி முசிறி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த பிறகு இன்று மாலை திருச்சி வந்தடைந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்த பின்பு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் கல்கண்டார் கோட்டை. சங்கிலியாண்டபுரம். அருணாச்சலம் மன்றம். ராஜா காலனி .உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அலுவலக இடங்களை ஆய்வு செய்ய உள்ளார் பிறகு இன்று இரவு திருச்சியில் தங்கி நாளை மணப்பாறை புதுக்கோட்டை தஞ்சை அதன் பிறகு திருவாரூர் நாகை மயிலாடுதுறை கும்பகோணம் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புகின்றனர். முன்னதாக இந்த ஆய்வின்போது மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமசுப்பு இணைச் செயலாளர் நித்தின் கும்பல்கர் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் முன்னாள் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன் மாவட்ட தலைவர் ரெக்ஸ். முன்னாள் மேயர் சுஜாதா. மாநில பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜி கே முரளிதரன் முன்னாள் மாவட்ட தலைவர் விச்சு, கரூர் மாவட்ட துணைத்தலைவர் குளித்தலை பிரபாகரன் அகில இந்திய பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட துணை தலைவர்கள் மற்றும் மாவட்ட கட்சியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி சொத்து மீட்பு குழு தலைவர் கே வி தங்கபாலு கூறுகையில் முன்னாள் தலைவர்கள் விட்டுச்சென்ற காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்து வருங்கால இளைஞர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆய்வு செய்வதாகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கார்கே அவர்களிடம் எடுத்துக் கூறி பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வ பொருந்தகை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முன்னெடுத்துச் செல்வார் என கூறினார்.