தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டம் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முனியப்பன் வரவேற்புரையாற்றிய மாநில தலைவர் மதுரம் தலைமை தாங்கினார். நன்றி வணக்கம் அகில இந்திய தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:-
நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்றவாறு தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், தமிழக பொது சுகாதாரத் துறையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வேலை வாய்ப்பு அலுவலக மூலமாக நியமனம் செய்யப்பட்ட அனைத்து பல்நோக்கு பணியாளர்களையும் காலமுறை ஊதியத்தில் கொண்டு வரக்கோரியும், 12,527 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் துப்புரவு தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோர்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அகில இந்திய தலைவர் டாக்டர் கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், மேற்கொண்ட தீர்மானங்களை ஆளும் திமுக அரசு நிறைவேற்றி தரக் கோரியுள்ளோம். இத்தீர்மானங்கள் அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேறாவிட்டால் வருகிற 2026 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நாலு லட்சத்து 24 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாக்களிப்பது குறித்து முடிவு எடுக்கபட்டும் என தெரிவித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.