பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருச்சி மத்திய மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, கொடியேற்றி, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட த.மா.கா. தலைவர் கே டி தனபால், மாநில செயலாளர் மதிவாணன், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் மேலும் கிராம கமிட்டி தலைவர் அழகப்பன், வட்டார தலைவர் ரெங்கபாஸ்யம், அருள், நவீன், கிருஷ்ணமூர்த்தி, நடராஜ்,சத்யன், தர்மர், வெங்கடேஷ், ராமன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.