தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உங்களைத் தேடி சிறப்பு முகாமை கடலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அந்தநல்லூர் ஒன்றிய கம்பரசம்பேட்டை ஊராட்சியில் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி துவக்கி வைத்தார்.
அதனைக் தொடர்ந்து பேசுகையில்:- இந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 15 துறைகள் மற்றும் அதை சார்ந்த 45 சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இம்முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு பயிர் விதைகளை வழங்கினார். அருகில் ஸ்ரீரங்கம் தாசில்தார் தமிழ்ச்செல்வன் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், சண்முகம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரி ஜெயராணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.