தென்னிந்திய யாதவ மகா சபை திருச்சி மாவட்டம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268 வது ஆண்டு குருபூஜை விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது:- இக்கூட்டத்தில் தென்னிந்திய யாதவ மகாசபை திருச்சி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் யாதவ் வரவேற்புரை ஆற்றிட, மாநில தலைவர் வழக்கறிஞர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தென்னிந்திய யாதவ மகா சபை திருச்சி மாவட்ட தலைவர் குணசேகரன் யாதவ், தமிழ் மாநில யாதவ மகா சபை நிறுவனத் தலைவர் திருவேங்கடம் யாதவ், ஸ்ரீரங்கம் சிவாஜி சண்முகம் யாதவ், யாதவ மகாசபை இளவரசு யாதவ், மாநில அமைப்பு செயலாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு யாதவ மகாசபை பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் யாதவ், பாலாஜி யாதவ், அல்லூர் சீனிவாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 2068 வது ஆண்டு குருபூஜை விழாவில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பல்வேறு குறிப்புகளை எடுத்துரைத்தனர். மேலும் இந்த கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன் யாதவ் முருகேசன் யாதவ் துணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன் யாதவ் ஜெயசீலன் யாதவ் வழக்கறிஞர் அணி கேசவன் யாதவ் உள்ளிட்ட தென்னிந்திய யாதவ மகாசபை நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக தென்னிந்திய யாதவ மகா சபை மாவட்ட பொருளாளர் கோபிநாத் யாதவ் நன்றி கூறினார்.