1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி நாடு இந்தியா- பாகிஸ்தான் என இருநாடுகளாக பிரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் பாரத தேச பிரிவினையின் 79 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பாக அமைதி பேரணி நடைபெறுகிறது

அதே போல திருச்சி பாஜக சார்பாக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது இந்த அமைதி ஊர்வலத்தில் பாஜகவினர் கையில் தேசியக்கொடியும் மற்றும் மகளிர் அணியினர் அகல் விளக்குகளை கைகளில் ஏந்தி கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்திலிருந்து வண்ணாரப் பேட்டையில் உள்ள திருச்சி மாவட்ட பிஜேபி தலைமை அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் நிர்வாகிகள் காளீஸ்வரன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பாரத் மாத்தாக் கீ ஜெய் என்ற முழக்கத்துடன் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்