அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திருச்சியில் பிரச்சாரப்பயணம் மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை முன்னாள் எம்பியும், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி .பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, பகுதி செயலாளர்கள் கலீல் ரகுமான், நாகநாதர் பாண்டி, மகளிர் அணி டாக்டர் தமிழரசி சுப்பையா உள்பட பலர் உள்ளனர்.