தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவது திட்டமிட்டு 15. 07 .2025 அன்று துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து இந்த முகாம்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக திருவானைக்காவல் பகுதி வார்டு எண் 4 பகுதிக்கு உட்பட்ட ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது இந்த திட்டம் முகாமிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் செய்திருந்தார்.
முன்னதாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் கல்லூரி முன்பாக திருவரங்கம் நாலாவது வட்டக் கழகம் சார்பில் வரவேற்பு பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது அந்த பேனரில் அமைச்சர் கே என் நேரு, மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, மாநகர கழக செயலாளர், மேயருமான அன்பழகன் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது ஆனால் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி பெயர் இடம் பெறவில்லை.
மேலும் எம்எல்ஏ அவர்களின் புகைப்படம் சிறிய அளவில் பேனரின் ஓரத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் இதனை எல்லாம் கண்டுக் கொள்ளாத எம்எல்ஏ பழனியாண்டி மக்கள் பணியே மகேசன் பணி என உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வருகை தந்த எம்எல்ஏ பழனியாண்டி திட்ட முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அங்கிருந்து விரைந்து சென்றார். இந்நிலையில் திமுக நிர்வாகிகள் கூறுகையில் வேண்டுமென்றே ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் எம்எல்ஏ பழனியாண்டி பெயரை வேண்டு(டா)ம் என்றே புறக்கணித்ததாக தெரிவித்தனர்.