கிரடாய் அமைப்பு (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி 10-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்புரோ-2025 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே கலையரங்கத்தில் இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கண்காட்சி அரங்கை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். கலெக்டர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர்.ராமசுப்பு, தமிழ்நாடு கிரடாய் தலைவர் ஹபீப், துணைத்தலைவர் கோபிநாதன், பாரத ஸ்டேட் பேங்க் பொது மேலாளர் ஜோபி ஜோஸ்,
துணை பொதுமேலாளர் அதுல் ப்ரியதர்ஷினி, மண்டல மேலாளர் வேலப்பன், கனரா வங்கி மண்டல தலைவர் இராகசுதா, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் உமா, யூனியன் பாங்க் மண்டல தலைவர் சாரதா தேவி, ஐஓபி வங்கி பொது மேலாளர் ஸ்ரீராம், பஞ்சாப் நேஷனல் வங்கி சர்க்கிள் ஹெட் இராஜு குமார் சின்ஹா, சரவணா எலக்ட்ரிக்கல் நிர்வாக பங்குதாரர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினர். திருச்சி கிரடாய் சேர்மன் ரவி, தலைவர் மனோகரன், பேர்புரோ கண்காட்சி சேர்மன் நசுருதீன், திருச்சி கிரடாய் செயலாளர் இளமுருகன், பொருளாளர் முருகானந்தம், கண்காட்சி கமிட்டி செயலாளர் அலாவூதீன், ஆலோசகர்கள் ஆனந்த், நூர்முகம்மது, உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கிரடாய் கண்காட்சியின் விழா மலர் வெளியிடப்பட்டது.
2000-க்கும் மேற்பட்ட படைப்புகள் இந்த கண்காட்சியில் ஒரே இடத்தில் இருப்பதால் எங்கு வீடு வாங்கலாம்,எந்த விலையில் வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், கண்காட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை 29 கட்டுமான நிறுவனத்தினர்களும், 6 வங்கிகள், மற்றும் வீடுகளுக்கான கதவுகள், டைல்ஸ், உள் அலங்காரம், எலக்டிரிக்கல் போன்ற 10 நிறுவனங்களுடன் 45 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடு வாங்குபவர்களுக்கு வெவ்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இங்கு ரூ.30 இலட்சம் முதல் ரூ.5கோடி வரை, உடன் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் வீடுகள் உள்ளன. பொதுமக்கள் கண்காட்சியை காண அனுமதி இலவசம். கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.