திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் ஓவிய கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்கியா குளிர் அரங்கில் நடைபெறுகிறது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார் . முதல்வர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார். முதன்மை விருந்தினர் மேனாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும் கேரளா ஃபிலிம் ஆர்ட் டைரக்டர் ராஜசேகரன் பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.ஓவிய கண்காட்சியில் இளம் ஓவியர்களின் செம்பு & வெண்கலம் காலம்,பானை கோட்டோவியம்,சிந்து வெளி தமிழ் எண்கள் தமிழ் தாய்,கீழடி வைகை ஆறு சிறப்புகள், சிந்துவெளிக்கும்- சங்க இலக்கியத்திற்கும்- தமிழ்நாட்டிற்ககும் உள்ள இணைகள்,கடவுள்களின் புலப்பெயர்வு முருகன், எருமை, ஐராவதம் மகாதேவன் -அடையாள குறீயீடுகள், சேவல் சண்டை ( சிந்துச்சமவெளி சண்டை சேவல்கள் குறியீடு), மொகஞ்சதாரோ பெருங்குளியலிடம் – சங்க இலக்கியத்தில் நீர் விளையாட்டு,
சிங்கம் யானை கலித்தொகை -103 ம் பாடல்,எலும்பை தின்னும் ஒட்டகம் , தந்தத்தால் செய்த பகடை ,அசோகரின் கிர்னர் கல்வெட்டு மாங்குளமும் தமிழ் பிராமி கல்வெட்டும் தலைப்பில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. ஓவியம் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் க்யூஆர் கோடு இடம் பெற்றிருந்தது. பொதுமக்கள் செல்போன் மூலம் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து ஓவிய வரலாற்றினை அறிந்தனர். பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், திரைப்பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் உள்ளிட்டோர் பாராட்டுச் சான்றிதழையும் பரிசுகளை வழங்கினர்.