சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருகில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் க.இப்ராகிம், பகுதிச் செயலாளர்கள் சையது அபுதாஹிர், சுரேஷ் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.